பீற்றூட்

பீற்றூட்

பீற்றா வல்காருஸ்

Beta vulgaris

குடும்பம் - கீனோபோடியேசி

குளிரான, வெப்பான காலநிலைக்கு இசைவாக்கம் அடைந்த பயிராகையால் இதனை நாட்டில் எப்பாகத்திலும் திருப்திகரமாகச் செய்கை பண்ணலாம். ஆணி வேரில் உணவு சேமிக்கப்படும். இதன் நிறத்திற்கு காரணம் சிவப்பு நிறப் பொருளான பீடாசயனின் ஆகும்.

மண்

நன்கு நீர் வடிந்து செல்கின்ற சேதனப் பொருட்களைக் கொண்ட மண் பீற்றுட் செய்கைக்கு மிக உகந்தது. பொதுவாக பீ.ச் இன் அளவு 6.3 - 7.3 வரை இருப்பின் மிக நல்லது.

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கற்கள்

கிறிம்சன் குளோப்

இவ்வர்க்கத்தை 70 - 90 நாட்களில் அறுவடை செய்யலாம். கிழங்கின் வெளிப்புறம் சிவப்பு நிறமாகும். கிழங்கின் மையப்பகுதி செவ்வூதா நிறமாகச் காணப்படும். எல்லா வலயங்களிலும் பயிரிடலாம். உலர் வலயத்தில் வெண்ணிற அடையாளங்கள் ஏற்படுவதால் தரம் குறையும்.

டெற்றொயிட் டாக்றெட்

70 - 90 நாட்களில் அறுவடை செய்யலாம். கிழங்கின் நிறம் கிறிம்சன் குளோப் ஒத்தது. எல்லா வலயங்களுக்கும் சிபாரிசு செய்யப்பட்டது.

டொப் மார்கட்

75 - 90 நாட்களில் அறுவடை செய்யலாம். சிவப்பு நிற பெரிய கிழங்கு குளிரான கால நிலைக்கு உகந்தது. மலை நாட்டு ஈர, இடை வலயங்களுக்கு  சிபாரிசு செய்யப்பட்டது.

தேவையான விதை

ஹெக்டயரான்றிக்கு 5 -6 கி.

நாற்று மேடைகளை அமைத்துலும், பராமரித்தலும்

சூரிய வெளிச்சம் நன்கு விழுகின்ற, நீர் தேங்கி நிற்காத இடத்தை இதற்கென தெரிவு செய்து கொள்ளவும். நிலத்தைப் புரட்டி ஒரு மீற்றர் அகலமாக, 20 ச.மீ உயரமான பாத்திகளை அமைத்துக் கொள்ளவும். இப்பாத்திகளுக்கு நன்கு உக்கிய சேதனப்பசளைகளை இட்டு, மண்ணுடன் கலந்துவிடவும், விதைகளை நடுவதற்கு முன் நாற்றுமேடைகளைத் தொற்றுநீக்கம் செய்யவும். உமி, வைக்கோல் என்பனவற்றைத் தட்டுகளாக இட்டு, மெதுவாக தீ வைத்தல், பங்கசு நாசினிகளை விசிறுதல், கடும் சூரிய வெப்பம் நிலவும் காலத்தின் நிறமற்ற பொலித்தீனால் மேடைகளை 2 கிழமைகள் வரை மூடி வைத்திருத்தல் என்பனவற்றின் மூலம் தொற்று நீக்கம் செய்யலாம். 10 ச.மீ. இடையுவெளியுள்ள வரிசைகளில் விதைகளை நடவும். 4-6 கிழமை வயதானதும் சிறு கிழங்குகள் உள்ள நாற்றுக்களை நடுகை செய்யலாம். தயார் செய்யப்பட்ட தோட்டங்களில் நேரடியாக இதனை நடலாம்.

  • மலை நாட்டில் - உயர் பாத்தி முறை
  • தாழ் நிலத்தில் - உயர் பாத்தி அல்லது வரம்பு சால் முறை

நிலதிதைப் பண்படுத்தல்

செய்கை பண்ணவுள்ள தோட்டத்தை 20 - 30 ச.மீ ஆழம் கொத்தி மண்ணைப் புரட்டி 20 ச.மீ உயரமான பாத்திகளை அமைக்கவும். நன்கு உக்கிய சேதன எருவில் 10 தொன்னை ஹெக்டயருக்கு இட்டு மண்ணுடன் நன்கு கலந்து விடவும்.

நாற்றுக்களை நடல்

நாற்றுக்களை நடுவதற்கு முன்னர் அடிக்கட்டுப் பசளையாக இடவேண்டிய இராசாயனப் பசளைகளைப் பாத்திகளுக்க இட்டு நன்கு கலந்து விடவும்.

நடுவதற்கு உகந்த நாற்றுக்களைக் கவனமாகப் பிடுங்கி, அதன் இலை நுனியை வெட்டிவிடவும் இதன் பின் ஆணி வேரில் சிறிதளவையும் வேட்டிய பின்னர் நடவும்.

இடைவெளி

உலர் வலயம் - வரிசைகளுக்கிடையே 30 ச.மீ தாவரங்களுக்கிடையே 20 ச.மீ

மலை நாட்டிற்கு - வரிசைகளுக்கிடையே 30 ச.மீ தாவரங்களுக்கிடையே 15 ச.மீ

பசளை இடல்

 

யுறியா

கி.கி / ஹெ

முச்சுப்பர் பொசுபேற்று

கி.கி / ஹெ

மியுறியேற்றுப்

பொட்டாசு கி.கி / ஹெ

அடிக்கட்டுப் பசளை

165

275

125

நட்டு 4 வது வாராம்

165

-

125

 

நாற்றுமேடைக்கு

5 சதுர மீற்றர் பரப்பளவுள்ள நாற்று மேடையொன்றிற்கு 5 கி. யூறியா, 5 கி, மியூறியேற்றிப் பொட்டாசு என்பனவற்றை முளைத்து 2 வது கிழமை இடல் வேண்டும்.

நீர்ப்பாசனம்

மண்ணின் ஈரப்பற்றை அவதானித்து தேவைக்கேற்ப 3-4 நாட்களுக்கொரு தடவை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

களைக்கட்டுப்பாடு

நாற்றுக்களைத் தோட்டத்தில் நட்டு 2 வது வாரத்தில், முதலாவது தடவை களை பிடுங்கவும். இதன் பின் மேற்கட்டுப் பசளைகளை இட முன்னர் அதாவது 4 வது வாரத்தில் தோட்டத்தில் களை பிடுங்கவும்.

பீடைகளைக் கட்டுப்படுத்தல்

வெட்டுப் புழுக்கள்

இவை நாற்றின் கழுத்துப் பகுதியைக் கடித்து சேதப்படுத்தும், தாக்கம் வரண்ட காலத்தில் அதிகமாகக் காணப்படும் போது, கார்போபியுரான், டோபென்யுரொக்ஸ், குளோர்பைறிபொஸ், புரோத்தியோபொஸ் ஆகியவற்றில் ஏதாவதொன்றை சிபாரிசு செய்யப்பட்ட அளவு விசிற வேண்டும்.

நோய்கள்

நாற்றழுகல்

நாற்றுக்கள் இரண்டு வார வயதை அடையும் வரை இந்நோய் ஏற்படும். நோய்க் காரணியான பங்கசு ஆணி வேரையும், வித்திலையையும் சேதப்படுத்துவதால், நாற்று வாடி இறக்கும். இதற்கு திராம்,கப்ரான், ஆகியவற்றில் ஏதாவதொன்றை நாற்றுமேடைக்கு விசிறவும்.

வேர் முடிச்சு வட்டப்புழு

நுவரெலியாவில் பாதிப்பு அதிகம், வேர்வெடிக்கும் 3% காபோபியூராளை இடவும்.

இலைச் சுரங்க மறுப்பி

இலையில்  வெள்ளிநிற சுருளி அடையாளங்கள் காணப்படும். பாதிக்கப்பட்ட இளம் தளிர்கள் விகாரமடைந்து மேல் நோக்கி சுரண்டு காணப்படும். மஞ்சல் நிற பொலிதீனில் ஒட்டும் பதார்த்தம் ஒன்றை பூசி தோட்டத்தில் தொங்க விடவும். பயிர் சுழற்சி பாதிக்கப்பட்ட பயிர்ப் பகுதிகளை அழித்தல் போன்றவை இதனை கட்டுப்படுத்த உதவும்.

அறுவடை

நாற்று நட்டு 75-90 நாட்களில் அறுவடை செய்யலாம்.

விளைச்சல்

ஒரு ஹெக்டயருக்கு 12 -15 மெ.தொ. விளைச்சலைப் பெறலாம்.

அறுவடைக்குப் பின்

அறுவடை செய்த கிழங்குகளில் நன்கு முதர்ச்சியடைந்த இலைகளை மாத்திரம் அகற்றிய பின் அல்லது எல்லா இலைகளையும் அகற்றிய பின் தேவைக்கேற்ப சந்தைக்கு அனுப்பலாம். காற்றோட்டம் இருக்கத் தக்கவாறு கயிற்றுச் சாக்கில் கொண்டு செல்ல வேண்டும்.