கோவா

கோவா

Brassica oleracea

குடும்பம் - பிரசிகேசி

காலநிலைத் தேவை

குளிரான காலநிலையை கோவா நன்கு தாங்கி வளரும். உலர் வலயத்திலும் செய்கை பண்ணலாம். ஆனால் ஒவ்வொரு விவசாயக் காலநிலை வலயத்திற்கும் சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களையே செய்கை பண்ண வேண்டும்.

மண்

பீ.எச் பெறுமான 6 - 6.5 வரையுள்ள மண் பயிர்ச் செயகைக்குச் சிறந்தது. அமிலத்தன்மை அதிகமாகும் போது கோவா குண்டாந்தடியுரு நோயால் பாதிக்கப்படுவது அதிகமாகும். சேதனப் பசளைகள் அடங்கிய வளமான மண்ணை பயிர்ச் செய்கைக்குத் தெரிவு செய்யவும்.

நிலத்தைப் பண்படுத்தல்

30 - 40 ச.மீ ஆழத்திற்கு மண்ணைக் கொத்தி நன்கு நிலத்தைப் பண்படுத்தவும். அமில மண்ணாயின் ஹெக்டயருக்க 2 தொன் வரை சுண்ணாம்பிடவும்.

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்கள்

மலைநாட்டு  ஈரவலயம்

லங்கா கோவா - விதை உற்பத்தியிற்கு மாத்திரம்

க்சோடிக்

இதன் முட்டை பச்சை நிறமாகும். இறுக்கமானது. தட்டையானது முதல் வட்ட வடிவமாகக் காணப்படும்  80 - 85 நாட்களில் அறுவடை செய்யலாம்.

ஹேர்கியுலிஸ்

ஒரளவு அலை போன்ற ஓரங்களைக் கொண்ட தடிப்பான இலைகள் முட்டைகள் மிகவும் இறுக்கமாக  இருப்பதோடு வட்ட வடிவமாகக் காணப்படும். இதனை 100 - 105 நாட்களில் அறுவடை செய்யலாம்.

குரோஸ்

இலைகள் பச்சை நிறமான அலை போன்ற ஒரங்களைக் கொண்டது. நடுத்தரளவு இறுக்கமான முட்டை, தட்டையான வட்டம்

குளோரியா F1

இலை நீல பச்சை நிறமான அலை போன்ற  ஒரங்களைக் கொண்டது. முட்டை இறுக்கமான தட்டை யானதும்.

மத்திய நாடு

க்சோடிக்

முட்டை பச்சை நிறமானது. பொதுவாக இவ்வர்க்கம் தட்டையானது முதல் வட்டமானது வரை காணப்படும்.

ஏ.ஸ் குரொஸ் (கலப்பு)

ஓரளவு இறுக்கமான, தட்டையாக்கப்பட்ட உருண்டை வடிவான முட்டைகள், இதனை 85 - 90 நாட்களில் அறுவடை செய்யலாம்.

கே. வை குரொஸ் (கலப்பு)

85 - 90 நாட்களில் அறுவடை செய்யலாம். இதன் முட்டை ஓரளவு இறுக்கமானது உருண்டை வடிவானது.

தேவையான விதை

ஹெக்டயரொன்றிற்க்கு 200 - 250 கிராம்

 

 

நாற்றுமேடைகளை ஆயத்தம் செய்தல்

ஆரோக்கயமான, வீரியமான நாற்றுக்களைப் பெற்றுக் கொள்ள நாற்று மேடைகளைத் தயார் செய்வது முக்கியமானதாகும். இதற்கு நீர் வசதியுள்ள அடிக்கடி அவதானிக்கக்கூடிய சூரிய வெளிச்சம் நன்கு விழுகின்ற, முன்னர் கோவா  குடும்பப் பயிர்களைச் செய்கை பண்ணாத இடங்களைத் தெரிவு செய்ய வேண்டும். அமில மண்ணாக இல்லாத தரையாக இருப்பது மிக முக்கியமானதாகும். 1 x 3 மிற்றர் அளவுள்ள பாத்தி 12 -15 ச.மீ உயரமானதாக இருத்தல் வேண்டும்

கூட்டெரு மேல் மண் என்பனவற்றை 1 : 1 என்ற விகித்ததில் தயாரித்த மண் கலவையை நாற்று மேடையின் மேல் 6 - 8 ச.மீ வரை இடவும். அடி அழுகல் பாதிப்புகளை ஏற்படுத்தும் நோய்க் காரணிகளை அழிப்பதற்காக போமொசொல்போட்டே (திராம்) என்ற பங்கசு நாசினியை நாற்று மேடைக்கு விசிறல் வேண்டும். ஹெக்டயருக்கு 2000 கிராம் (2 கி.கி) திராம் போதுமானதாகும். இவ்வாறு தொற்று நீக்கம் செய்யப்பட்ட பாத்திகளில் விதைகளை நடவும். இரு வரிசைகளுக்கிடையே 10 ச.மீ. இடைவெளியில் விதைகள் ஒன்றின் மேல் ஒன்று விழாதவாறு விதைக்கவும். இதனால் நாற்றுமேடையில் ஏற்படும். அடியழுகல் நோயைத் தவிர்க்க முடியும். 1 சதர மீற்றர் ஆழத்தில் விதைகளை விதைத்து, அதனைத் தொற்று நீக்கம் செய்யப்பட்ட மண்ணால் மூடவும். இதன் மீது வைக்கோல், காய்ந்த மானாப்புல் போன்றவற்றால் பத்திரக்கலவை இட்டு, நீர் ஊற்றவும். 4-5 நாட்களில் பின் விதைகள் முளைக்கத் தொடங்கும். இதன் பின் பத்திரக்கலவையை அகற்றவும். தினந்தோறும் இரு தடவைகள் நீரூற்றவும். பாத்தியின் மேல் கூடாரமொன்றை அமைப்பதன் மூலம் கடுமையான மழை, ஏனைய பீடைகள் என்பனவற்றிலிருந்து சிறிய நாற்றுக்களைப் பாதுகாக்க முடியும். ஒரு கிராம் விதையிலிருந்து 250 நாற்றுக்களைப் பெறலாம்.

நாற்று நடல்

3 - 4 வரை வயதுடைய ஆரோக்கியமான, வீரியமான நாற்றுக்களைப் பிடுங்கி மாலை வேளையில் நடுவது மிகவும். உகந்தது. நாற்று நட்டவுடன் தினந்தோறும் 2 தடவைகள் நீரூற்றவும்.

நடுகை இடைவெளி

வரிசைகளுக்கிடையே 50 ச.மீ வரிசையில் இரு தாவரங்களுக்கிடையே 40 ச.மீ இடைவெளியில் நாற்றுக்களை நடவும்.

பசளை இடல்

அமில மண்ணாயின் நாற்று நடுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் சுண்ணாம்பிடவும்.

நாற்று நட ஒரு கிழமைக்கு முன்னர் ஹெக்டயருக்கு 10 தொன் கோழி யெருவை  நடுகைக் குழிகளுக்கு இட்டு மண்ணுடன் நன்கு கலந்து விடவும்.

நாற்று நடுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் அடிக்கட்டுப் பசளையாக சிபாரிசு செய்யப்பட்ட இரசாயனப் பசளைகளை இடவும்.

நுவரெலியா மாவட்டத்திற்கு

 

யுறியா

கி.கி / ஹெ

முச்சுப்பர் பொசுபேற்று

கி.கி / ஹெ

மியுறியேற்றுப்

பொட்டாசு கி.கி / ஹெ

அடிக்கட்டுப் பசளை

-

275

75

நட்டு  2 வது வாராம்

110

-

-

நட்டு  4 வது வாராம்

110

-

75

நட்டு  8 வது வாராம்

110

-

-

 

 

 

 

 

பதுளைக்கும், ஏனைய மாவட்டங்களுக்கும்

 

யுறியா

கி.கி / ஹெ

முச்சுப்பர் பொசுபேற்று

கி.கி / ஹெ

மியுறியேற்றுப்

பொட்டாசு கி.கி / ஹெ

அடிக்கட்டுப் பசளை

110

275

75

நட்டு  3 வது வாராம்

110

-

-

நட்டு  6 வது வாராம்

110

-

75

 

களைக்கட்டுப்பாடு

கோவாவிற்கு மேற்கட்டு பசளை இடும்போது களையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நீர்ப்பாசனம்

கோவாவில் முட்டைகள் உருவாகும் போது நிலத்தில்  ஈரப்பதன் இருப்பது அவசியமாகும். எனவே, இச்சந்தர்ப்பத்தில் எவ்விதமான நீர்ப்பற்றாக் குறைவும் இல்லாமல் பாதுகாப்பது அவசியமாகும். நாற்றுக்கள் நடப்பட்ட ஆரம்ப காலங்களில் தினந்தோறும் இரு தடவை நீரூற்றவும் இதன் பின் தினசரி நீரூற்றவும்.

கோவாவைப் பாதிக்கும் நோய்கள்

குண்டாந்தடியுரு வேர் நோய்

மண்ணின் அமிலத்தன்மை அதிகமாக  இருக்கும் போது இந்நோய் அதிக சேதத்தை ஏற்படுத்தும் பிளாஸ்மோடிபெரா பிரசிக்கே என்னும் பங்கசு வினால் ஏற்படும் இந்நோயைத் தவிர்ப்பதற்கு முறையான பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளல் பயிர்ச் சுழற்சியைப் பின்பற்ற என்பன முக்கியமானவையாகும்.

நாற்றழுகலும், நாற்று வெளிறலும்

நாற்று மேடைகளை பங்கசுநாசினியால் தொற்று நீக்கம் செய்தல் முறைப்படி பயிர் செய்தல்.

கறுப்பு அழுகல்

சாந்தோமொனாஸ் கம்பெஸ்றிஸ் என்னும் பக்றீரியாவால் ஏற்படும்.

இலைப்புள்ளிநோய்

கைக்கோஸ்பெரெல்லா பிரசிகோ என்னும் பூஞ்சணத்தால் ஏற்படும். இந் நோயைக் கட்டுப்படுத்த ரெபுகொனசோல் என்னும் பங்கசு நாசினியை சிபாரிசு செய்யப்பட்டவாறு விசிறவும். 0.35 மி.லீ  1 லீற்றர் நீரில் கரைக்கவும்.

கீழ்ப்பூஞ்சன நோய்

பேகர் என்னும் பங்கசு நாசினியை சிபாரிசு செய்யப்பட்டவாறு விசிறவும்.

பீடைக்கட்டுப்பாடு

வெட்டுப்புழு

நாற்றுக்கள் சிறியதாக இருக்கம்  போது இத்தாக்கம் ஏற்படுவதால், நாற்றுக்களை நட்டவுடன் புரோபெனோபொஸ் 50% (செலிக்குரோன்) நாசினியில் 25 - 28 மி.லீ. 10  லீற்றா நீரிற் கலந்து விசிறவும்.

மயிர்க் கொட்டி, டயமண்ட் முதுகு அந்துப்பூச்சி, இலையரி புழு, காய்துளைப்பான் புழு

இப்பீடைகளைக் கட்டுப்படுத்த தோன்பென் புரொக்ஸ் 10% (ரிபோன்)  குளோபுளூசுரோன் ( அட்டபுரோன் ) ஆகியவற்றை சிபாரிசு செய்யப்பட்ட அளவு விசிறவும்.

அறுவடை

வர்க்கத்திற்கேற்ப அறுவடை செய்யப்படும் காலம் வேறுபடும் ( 90 - 100 நாட்கள் ) குறிப்பிட்டதை விட அதிகளவில் முதிர்ச்சியடைவதால் முட்டைகள் வெடிக்கும். எனவே சரியான பருவத்தில் அறுவடை செய்யவும்.

காலை வேளையில் அறுவடை செய்வதோடு, கடும் சூரிய வெளிச்சம் காணப்படும் போது அறுவடை செய்ய வேண்டாம். முட்டையை மூடியிருக்கும் 2 - 3 இலைகளுடன் கவனமாக அறுவடை செய்யவும்.

விளைச்சல்

சராசரி விளைச்சலாக ஹெக்டயருக்கு 40 மெ.தொன் வரை பெறலாம்.

அறுவடைக்குப் பின்

அறுவடை செய்தவுடன் பழுதடைந்த முட்டைகளை அகற்றவும். சிறந்த காற்றோட்டமுள்ள சாக்குகளில் கோவாவைக் கொண்டு செல்ல வேண்டும்.  இயலுமான வரை விரைவில் கொண்டு செல்லவும்.  இதனால் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புக்களைத் தவிர்த்துக்கொள்ள முடியும்.