சிறகவரை

சோபோகாப்பஸ் ரெற்றாகொனோலோபஸ்

Psophocarpus tetragonolobus

குடும்பம் - பெபேசீ

கடல் மட்டத்திலிருந்து 2000 மீற்றர் உயரம் வரையான பிரதேசத்தில் செய்கை பண்ணக் கூடிய பயிராகும். பாரம்பரியமாக செய்கைபண்ணப்படும் சிறகவரை வர்க்கத்தில் பெரும் போகத்தில் மாத்திரமே விளைவைப் பெறலாம். இவ்வர்க்கங்களில் பூக்கள் உருவாக குறைவான பகற் பொழுது அவசியமாகும். ஆனால், தற்போது வருடம் முழுவதும் செய்கை பண்ணக் கூடிய வர்க்கங்கள் விருத்தி செய்யப்பட்டுள்ளன.

மண்

மணல் தன்மையான தரையிலிருந்து களித் தன்மையான தரை வரை, எத்தரையிலும் பயிரிடலாம். சேதனப் பசளைகள் கொண்ட, நன்கு நீர்வடிகின்ற, மணல் தன்மையான இருவாட்டித் தரை அல்லது களித்தன்மையான இருவாட்டித் தரை மிகவும் சிறந்தது.

நிலப் பண்படுத்தல்

ஆழமாக உழுது மண் கட்டிகளை உடைத்து மண்ணைத் தூர்வையாக்கவும். தரையில் நீர் தேங்கக்கூடிய தன்மை இருந்தால் உயர் மேடைகளை அல்லது வரம்புகளை அமைக்கவும்.

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்கள்

எஸ். எல். எஸ் - 44

வருடம் முழுவதும் செய்கை பண்ணி திருப்திகரமான விளைவைப் பெறலாம். பச்சை நிறக் காய்கள் காயொன்றின் சராசரி நிறை 15 கிராம் வரை இருக்கும்

தேவையான விதை

ஹெக்டயரொன்றிற்கு 21 - 23 கி.கி

நடுகை இடைவெளி

75 x 60 ச.மீ

நடுகைக்காலம்

இரண்டு போகங்களிலும் மழைபெய்ய ஆரம்பித்தவுடன் நடுக, ஒவ்வொரு குழியிலும் 2 - 5 ச.மீ ஆழத்தில் 2 - 3 விதைகள் வரை நடவும்.

பசளை இடல்

நன்கு உக்கிய சேதனப் பசளையை ஆயத்தம் செய்யப்பட்ட குழிகளில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவும். இதைத் தவிர பின்வரும் இரசாயனப் பசளைகளையும் இடவும்.

யூறியா

கி.கி / ஹெ

முச்சுப்பர் பொசுபேற்று

கி.கி / ஹெ

மியுறியேற்றுப்

பொட்டாசு கி.கி / ஹெ

அடிக்கட்டுப் பசளை

75

220

65

விதை முளைத்து 4 வது வாரம்

20

-

-

விதை முளைத்து 10வது வாரம்

20

-

-

ஆதாரம்

குழிகளுக்கு அருகே நடப்பட்ட தடியில் கொடியைப் படர விடவும்.

நீர்ப்பாசனம்

உலர் காலத்தின் போது வாரத்திற்கு ஒரு தடவை நீர்ப்பாச்சுக. மணல் தன்மையான தரையில் செய்கை பண்ணும் போது குறைந்த இடைவெளியில் நீர்ப்பாய்ச்சவும்.

களைக்கட்டுப்பாடு

ஆரம்ப வளர்ச்சி மெதுவாகவே நடை பெறுவதனால் இக்காலத்தினுள் களைகளைக் கட்டுப்படுத்த விசேட கவனம் செலுத்த வேண்டும். விதை முளைத்த பின் 1,3,5,7,9,12ம் வாரங்களில் களை பிடுங்குவது சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

நோய் பீடைக்கட்டுப்பாடு

சிறகவரையை அதிகளவில் பாதிக்கும் நோய், பீடைகளின் தாக்கம் எதுவும் இதுவரை அறியப்படவி ல்லை. சில சமயங்களில் இலை அரிப்புழுக்கள், காய்துளைப்பான் போன்றவற்றால் சிறிதளவு பாதிக்கப்படலாம். பக்றீரியா வாடல் நோயால் கொடிகள் பாதிக்கப்படுவதாக அரிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளைச்சல்

ஹெக்டயரொன்றிற்கு 15 - 20 மெ.தொ

அறுவடை செய்தல்

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களில் (எஸ். எல். எஸ். - 44) முதலாவது அறுவடையை 75 நாட்களில் பெறலாம். ஆனால் பரவலாகச் செய்கை பண்ணப்படும் வர்க்கங்களில் 90 - 100 நாட்களில் அறுவடை செய்யலாம். 3 - 4 நாட்கள் இடைவெளியில் இளம் காய்களை அறுவடை செய்யவும்.