பூசணி

கியுகபிற்றா மெக்சிமா

Cucurbita maxima

குடும்பம் - குக்கர்பிற்றேசி

இலங்கை மக்களிடையே பிரபல்யமான மரக்கறிப் பயிராகும். பல வழிகளில் சமைத்தல், குறைந்த செலவுடன் கூடிய இலாபத்தைப் பெறல், நன்கு முற்றிய காய்களை நீண்ட காலம் சேமித்து வைத்தல் என்பன  இதன் சிறப்பியல்புகள் ஆகும்.

பொருத்தமான காலநிலை

உலர், இடை வலயங்களில் கடல் மட்டத்திலிருந்து 500 மீற்றர், உயரம் வரையான பிரதேசங்களில் செய்கை பண்ணலாம்.

மண்

பீ. எச் அளவு 5.5 - 7.5 உள்ள, சேதன உக்கல் அதிகளவுள்ள, சிறந்த நீர் வடிப்புத்திறன் உள்ள மண் சிறந்தது.

நிலப்பண்படுத்தல்

20 - 30 ச.மீ ஆழத்திற்கு உழுது, மண்கட்டிகளை உடைத்து மண்ணைத் தூர்வையாக்கவும் 30 ச.மீ நீள, அகல, ஆழமுள்ள நடுகை குழிகளை வெட்டவும்.

ஒவ்வொரு நடுகைக் குழிக்கும் 5 கிலோ அளவு உக்கிய சேதனப் பசளையை மண்ணுடன் கலந்து இட்டு தரை மட்டத்தை விட 10 ச.மீ உயரமாக இருக்கத்தக்கதாக குவித்துவிடவும்.

சிபாரிசு செய்யப்பட்ட  வர்க்கங்கள்

ஏ.ன்.கே. ருஹுணு

சீரான வடிவமுள்ள காய்கள், சிறியவை (2 - 2 ½ கி.கி) குறுகிய கால வர்க்கம் (2 - 2 ½ மாதங்கள்) குறுகிய மழை காலத்தில் செய்கை பண்ண உகந்தது. வயல் நிலங்களில் இரு போகங்களுக்கிடையே செய்கைபண்ண  உகந்தது. வெளிப்புறத்தோல் கடினமானது. சதை மஞ்சள் நிறமானது. கொண்டு செல்ல மிக உகந்தது.

உள்ளூர் வர்க்கம்

வடிவத்திலும் பருமனிலும் பல வேறுபாடுகள்  உள்ளன. மானாவாரியாக காலபோகத்தில் மாத்திரம் செய்கைபண்ணலாம். சதையின் நிறம் மஞ்சள் முதல் செம்மஞ்சள் வரை வேறுபடும்.

தேவையான விதை

ஹெக்டயரொன்றிற்கு 1 கி.கி

நடப்படும் காலம்

ருஹுணு வர்க்கம்

நீர்ப்பாசனம் செய்ய முடியுமாயின் எக்காலத்திலும் செய்கை பண்ணலாம்.

உள்ளூர் வர்க்கம்

பருவத்தில் பயிர் செய்வதற்க்கு உகந்தது.

விதை நடல்

சிறுபோகம் - மே

காலபோகம் - ஒக்டோபர்.

நடுகை இடைவெளி

உள்ளூர் இனங்கள் - 3 x  3 மீற்றர்

ஏ.ன்.கே. ருஹூணு - 2.5 x 2.5 மீற்றர்

பசளை இடல்

 

யூறியா

கி.கி / ஹெ

முச்சுப்பர் பொசுபேற்று

கி.கி / ஹெ

மியுறியேற்றுப்

பொட்டாசு கி.கி / ஹெ

அடிக்கட்டுப் பசளை

75

200

60

விதை முளைத்து 2 வது வாரம்

75

-

60

விதை முளைத்து 5 வது வாரம்

75

-

60

 

நீர்ப்பாசனம்

விதைகள் முழுவதும் முளைக்கும் வரை தினசரி நீர்ப்பாய்ச்சவும். அதன் பின்பு 5-7 நாட்களுக்கு ஒரு தடவை நீர்ப்பாய்ச்சவும்.

களைக்கட்டுப்பாடு

முளைத்து மூன்று வாரங்களின் பின்பு களைகளை அகற்றி (கையால் பிடுங்குவது சிறந்தது) வைக்கோலால் பத்திரக் கலவை இடுக.

நோய்க் கட்டுப்பாடு

கீழ்ப்பூஞ்சண நோய்

இப்பூஞ்சண நோயினால் முக்கோண வடிவான மஞ்சள் நிற புள்ளிகள்  இலைகளில் தோன்றுகின்றன.  இலைகள் கபில நிறமாகி  சுருளுகின்றன. இலைகளில் கீழ்ப்புறத்தில்  சாம்பல் வெள்ளை நிறமான பங்கசு  வித்தித்திணிவுகள் தோன்றுகின்றன.

தூள் பூஞ்சண நோய்

இலைகள் மஞ்சள் நிறமடைகின்றன. இலைகளின் இரு பக்கங்களிலும் வெண்ணிற வித்தித்திணிவுகள் தோன்றும்.

கட்டுப்பாடு

பாதிக்கப்பட்ட தாவரங்களையும், காட்டுக் கெக்கரி வகைகளையும் அழிக்க வேண்டும். சிபாரிசு செய்யப்பட்டுள்ள பங்கசு நாசினியை விசிறுக.

மெல்லழுகல் (பிந்தியம் இனம்)

பூஞ்சணத்தால் ஏற்படும். தாவரத் தண்டின் அடிப்பாகத்திலும், காய்களின் மேற்பரப்பிலும் நீர்த்தன்மையான மெல்லழுகல் தோன்றுகின்றது.

கட்டுப்பாடு

அதிகளவு நீர்ப்பாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மண்ணைக் கிளறி, காற்றோட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். சிபாரிசு செய்யப்பட்டுள்ள பங்கசு நாசினியை இலைகளுக்கும், தரைக்கும் விசிறுக.

கெக்கரி சித்திர வடிவ வைரசுநோய்

இலைகளில் மஞ்சள், பச்சை ஆகிய நிறங்கள் தொட்டம்  தொட்டமாகக் காணப்படும். இலைகள் சுருண்டு காணப்படும்.

கட்டுப்பாடு

பாதிக்கப்பட்ட தாவரங்களைப் பிடுங்கி அகற்றவும். நோய் காவிகளான வெண் ஈ போன்றவற்றை பூச்சி நாசினிகளை விசிறிக் கட்டுப்படுத்துக.

பீடைகளைக் கட்டுப்படுத்தல்

பழ ஈ

பெண் பூச்சி சிறிய காய்களின் தோலைத் துளைத்து முட்டையிடுவதால் அதிலிருந்து உருவாகும் குடம்பிகள் (புழுக்கள்) உட்புற பகுதிகளை உண்பதால், காய்கள், பூக்கள் உதிருவதோடு, காய்கள் அழுகும்.

கட்டுப்படுத்தல்

வைக்கோலால் காய்களை மூடவும். பெரமோன் பொறிகளைப் பயன்படுத்தவும். பாதிக்கப்பட்ட காய்களை அழித்து விடவும்.

கவர்ச்சிப் பொறி

பென்தியோன் பூச்சி நாசினியுடன், சீனியைக் கலந்து, அதில் கெக்கரி குடும்பத்தைச் சேர்ந்த காய்களை வெட்டிப் போடவும். இத்துண்டுகளை தோட்டத்தில் ஆங்காங்கே வைக்கவும்

பூச்சிநாசினிப் பாவனை

பென்தியோனில் சிபாரிசு செய்யப்பட்ட அளவை நீரிற் கரைத்து, அதில் ஒரு லீற்றருக்கு 25 கிராம் சீனியைக் கலக்கவும். பூக்கும் காலம் தொடக்கம் 2 வாரங்களுக்கொரு தடவை விசிறல் வேண்டும்.

அறுவடை செய்தல்

காய்களின் மேல் தூள் போன்ற படை ஒன்று ஏற்படும்போது அறுவடை செய்யவும்.

ஏ.ன்.கே ருஹூணு
பூக்கத் தொடங்கி 40 நாட்கள்.

உள்ளூர் இனங்கள்
பூக்கத் தொடங்கி 60 நாட்கள்.

விளைவு

சகல வர்க்கங்களினதும் விளைச்சல் (5000 - 25000 கி.கி / ஹெக்.) ஆகும்.

அறுவடையின் பின்பு

நன்கு முற்றிய காய்களை உலர்ந்த இடத்தில் 6 - 8 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.