முள்ளங்கி

முள்ளங்கி

ரெபானஸ் சற்றைவஸ்

Raphances sativus L.

குடும்பம் - பிரசிகேசிலெ

இலங்கையிலுள்ள எல்லா விவசாயக் காலநிலை வலயங்களிலும் முள்ளங்கியைச் செய்கை பண்ணலாம் நீர் நன்கு வடித்து செல்லக் கூடிய
6.00 - 7.5 வரையான பீ. எச் கொண்ட மண் இப்பயிர்ச் செய்கைக்கு மிக உகந்ததாகும்.

நிலத்தைப் பண்படுத்தல்

30 - 40 ச. மீ. அழத்திற்கு மண்ணைப் புரட்டி, கட்டிகளை உடைத்து விடவும். உயரமான பாத்திகளை அமைத்து, சேதனப் பசளைகளை மண்ணுடன் கலந்து விடவும்.

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்கள்

ஜப்பான்போல

வெண்ணிறமான வட்டவடிவான கிழங்கை உற்பத்தி செய்யும். இலைகள் பிர்ந்திருப்பதோடு நடுநரம்பில் பயிர்கள் காணப்படும். 45 - 50 நாட்களில் அறுவடை செய்யலாம். மத்திய, மலைநாட்டிற்கு மிக உகந்த வர்க்கமாகும்.

பீரலு

வெண்ணிறமான உருளை வடிவான கிழங்குகள் உருவாகும். இலைகள் பிரிந்திருப்பதில்லை, பயிர்களும் காணப்படுவதில்லை. 45 - 50 நாட்களில் அறுவடை செய்யலாம். பள்ள நாட்டிற்கு மிக உகந்த வரக்கமாகும். இதைத் தவிர ‘’ரெட் ரெடிஸ்’’ என அழைக்கப்படும் சலாது முள்ளங்கியும் மலைநாட்டுப் பகுதிகளில் விவசாயிகளிடையே பிரபல்யமானதாகும். 35 - 45 நாட்களில் அறுவடை செய்யலாம். இது சிறியகோலிக் குண்டு (மாபிள்) அளவுடையதாகும். இதை சமைக்காது பச்சையாக சம்பல் செய்து உண்ணலாம்.

தேவையான விதை

ஹெக்டயரொன்றிக்கு 5 கி.கி

இடைவெளி

வரிசைகளுக்கிடையே 25 - 30 ச.மீ வரிசையில் இரு தாவரங்களுக்கிடையே 10 ச.மீ சலாது முள்ளங்கி 20 x 5 ச.மீ

சலாது முள்ளங்கி - மலைநாட்டில் பயிரிடப்படும் சிவப்பு ஊதா நிறமான வேர் சிறிய அளவானவை.

நடுகை செய்தல்

விதைகளை வரிசைகளில் நடல் வேண்டும். விதைகள் முளைத்து ஒரு வாரமாகியதும் மேலதிகமான தாவரங்களைப் பிடுங்கி விடவும்.

பூப்பதைத் தடுப்பதற்காக மலைநாட்டில் மார்ச்சு - மே  ஆகஸ்ட் - ஒக்டோபர் மாதங்களில் முள்ளங்கியைச் செய்கை பண்ண வேண்டும்.

பசளை இடல்

 

யுறியா

கி.கி / ஹெ

முச்சுப்பர் பொசுபேற்று

கி.கி / ஹெ

மியுறியேற்றுப்

பொட்டாசு கி.கி / ஹெ

அடிக்கட்டுப் பசளை

90

110

65

விதை முளைத்து 3வது வாராம்

90

-

65

 

நீர்ப்பாசனம்

முதல் 4 - 5 நாட்களுக்குத் தினந்தோறும் அதன்பின், 3 - 4 நாட்களுக்கொரு தடவையும் நிரூற்றவும்.

களைக கட்டிப்பாடு

ஒரு தடவை கையால் களை பிடுங்கலாம். மலைநாட்டில் 4 வாரங்களிலும் ஏனைய பிரதேசங்களில் 2 வாரங்களிலும் களையைப் பிடுங்கலாம். களைகளை கட்டுப்படுத்தும் போது மண்ணை கூட்டி விட வேண்டும் வேர் காற்றிற்க்கு திறந்து விடப்படுமாயின் பச்சை நிறமாக மாறும்

பீடைக்கட்டிப்பாடு

 இலையரிப் புழுக்களின் தாக்கம் அதிகளவில் காணப்படும் போது சிபாரிசு செய்யப்பட்ட பூச்சி நாசினியை விசிறவும்.

இலைச் சுரங்கமறுப்பி

கிறிஸ் தடவிய மஞ்சள் நிறப் பொலித்தீன் பொறியைத் தோட்டத்தில் தொங்கவிடல் பயிர் சுழற்சி, பாதிக்கப்பட்ட தாவரப் பாகங்களை அழித்தல் ‘அசற்ரெக்ரின்’ அல்லது ‘’வைரோமைசின்’’ போன்ற பூச்சி நாசினிகளை விசிறல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.

வெட்டுப் புழு

சிறிய நாற்றுக்களை வெட்டும் பூச்சி நாசினியை விசிறவும். மண்ணைக் கிளறி, கூட்டுப்புழுக்களை அழிக்கவும்.

குண்டாந்தடியுரு நோய்

பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும் வேர் வீங்கி விகாரமடையும்

பயிரை நடமுன் மண்ணிற்குச் சுண்ணாம்பிடல், கோவா, முள்ளங்கி போன்ற பயிர்களை ஒரே இடத்தில் தொடர்ச்சியாக செய்கை பண்ணாதிருத்தல், காட்டுக் கடுகு என்னும் களையை தோட்டத்தில் வளரவிடாது தடுத்தல் போன்ற நடவடிக்கைகளின் முலம்  இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை செய்தல்

சரியான சந்தர்ப்பத்தில் அறுவடை செய்யவும். பிந்தி அறுவடை செய்யும்போது குழங்கின் தரம் குன்றும்.

விளைச்சல்

ஜப்பான்போல 40 -50 மெ. தொன் / ஹெ,

பீரலு 20 - 30 மெ. தொன் / ஹெ,

அறுவடைக்குப்பின்

கிழங்கின் பருமனிற்கேற்ப விளைபொருளை வகைப்படுத்தவும் காற்றோட்டம் இருக்கத்தக்கவாறு கட்டி, சந்தைக்குக் கொண்டு செல்லவும்.