போஞ்சி

போஞ்சி

பெசியோலஸ் வல்காரிஸ்

Phaseolus valgaris.L

குடும்பம் - பெபேசி

நுவரெலியா, பதுளை, மாத்தளை, கண்டி, மாவட்டங்களில் தற்போது போஞ்சி அதிகளவில் பயிரிடப்படுகின்றது. அதிகளவான வெப்ப நிலையும், கடும் மழையும் உள்ள பிரதேசங்களில் போஞ்சியைச் செய்கைபண்ண முடியாது. பூக்கள் உருவாகும்போது வெப்பநிலை 30 பாகை செ.கி விடக் குறைவாக இருத்தல் வெண்டும். இலங்கையில் மலைநாட்டில் ஈரவலயம் போஞ்சிச் செய்கைக்கு உகந்ததல்ல.

மண்

நீர் நன்கு வடிந்து செல்லக் கூடிய இருவாட்டி மண் மிக உகந்தது. சிவப்பு அல்லது மஞ்சள் பொட்சோலிக் மண் போஞ்சியைப் பயிர் செய்ய மிக உகந்தவை இதன் பீ.எச் அளவு 6.5 - 7.5 வரை இருப்பது நல்லது.

நிலத்தைப் பண்படுத்தல்

நிலத்தை ஒரு அடி ஆழம் வரை கொத்திப் புரட்டி மண்ணை நன்கு தூர்வையாக்க வேண்டும், தோட்டத்தில் காணப்படும் வேர்கள், களைகள் என்பனவற்றையும் பொறுக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்கள்

போஞ்சியில் இரு வகையானவை உள்ளன. அவையாவன கொடிபோஞ்சி, செடிபோஞ்சி என்பனவாகும்.

கொடிபோஞ்சி

கென்ரக்கி வொன்டர் கிறீன்

இதன் காய்கள் பச்சை நிறமானவை, மத்திய அளவுடையவை நார் கொண்டவை, வளைந்த நுனிகளைக் கொண்ட காயாகும்.

கெப்பெட்டிபொல நீலம்

18 - 20 ச.மீ நீளமான பச்சை நிறக் காய்களைக் கொண்டவை. 60 - 65 நாட்களில் அறுவடை செய்யலாம். 6-8 தடவைகள் அறுவடை செய்யலாம். கொடியொன்றில் 46 காய்கள் உருவாகும். பண்டாரவளை பிரதேசத்தில் விவசாயிகளின் தோட்டங்களில் ஹெக்டயருக்கு பொதுவாக 17 - 18 தொன் விளைவைத் தரும். இது அந்திரக்நோசு, துருநோய், வேர் அழுகல் போன்ற நோய்களைத் தாங்கி வளரும். விதை கடும் ஊதா நிறமானது.

இவற்றைத் தவிர விவசாயிகளிடையே பல வர்க்கங்கள் பிரபல்யமடைந்துள்ளன. உதாரணமாக பீஸ் பட்டர். கட்டுகஸ்தோட்டை, லங்கா நீலம் என்பன இவற்றிற் சிலவாகும்.

பலங்கொடை நீலம்

14 ச.மீ நீளமான, உருளை வடிவான பச்சை நிறமான காய்கள் உருவாகும் கொடிபோஞ்சி வர்க்கமாகும். விதைகள் கபில நிறமானவை, கொடியில் சீராக காய்கள் உருவாகும், குருநோய் வேர் அழுகல் என்பனற்றிற்கு எதிர்ப்புத்தன்மை கொண்டது. ஹெக்டயரொன்றிலிருந்து சராசரி விளைச்சலாக 12 - 14 தொன் வரை பெற்றுக் கொள்ள முடியும்.

லங்கா பட்டர்

16 - 17 ச.மீ நீளமான மஞ்சள் நிறமான உருளை வடிவான காய்கள் உருவாகும் கொடி போஞ்சி வர்க்கமாகும். விதைகள் கறுப்பு நிறமானவை, ஹெக்டயரொனறிலிருந்து சராசரி விளைச்சலாக 16 தொன் வரை பெறலாம். வேர் அழுகல், அந்திரக்நோசு, துருநோய் என்பனவற்றை எதிர்த்து வளரும் தன்மையும் இவ்வர்க்கத்திற்கு உண்டு.

நடுகை இடைவெளி

கொடி போஞ்சி 45 x 30 ச.மீ

பசளை இடல்

கொடி போஞ்சி

யூறியா

கி.கி / ஹெ

முச்சுப்பர் பொசுபேற்று

கி.கி / ஹெ

மியுறியேற்றுப்

பொட்டாசு கி.கி / ஹெ

அடிக்கட்டுப் பசளை

110

275

75

விதை முளைத்து 3வது வாரம்

110

-

75

செடி போஞ்சி

வேட்

காய்கள் கடும் பச்சை நிறமானவை, வட்டவடிவானவை, சதைப்பிடிப்பானவை, நார்கள் இல்லை. மத்திய அளவான காய்கள் மிக அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டது.

ரொப் குரொப்

காய்கள் இளம் பச்சை நிறமானவை, ஒரளவு வட்டமான காய்கள், இதில் நார் உள்ளது. இவையும், மத்திய அளவான காய்கள்.

செரொக்கி வெக்ஸ்

தட்டையான காய்கள், நார்கள் கொண்டவை, மஞ்சள் நிறத்தைச் சார்ந்த காய்கள்.

சாஞ்சயா

நட்டு 30 - 32 நாட்களில் பூக்கும் விளைச்சல் 7.5 - 18 தொன் / ஹெக்டயார் காய்கள் நீளமானவை.

விதைத் தேவை

செடி போஞ்சியாயின் ஹெக்டயர் ஒன்றிற்கு 75 கி.கி கொடி போஞ்சியாயின் ஹெக்டயர் ஒன்றிற்கு 50 கி.கி

நடுகை செய்யப்படும் காலம்

பதுளை மாவட்டத்தில் காலபோகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் சிறு போகத்தில் மார்ச்சு, ஏப்ரல் மாதங்களிலும் நடுகை செய்யலாம்.

நடுகை இடைவெளி

செடிபோஞ்சி 40 x 10 ச.மீ

விளைச்சல்

சிறப்பாக பராமரித்தால் ஒரு ஹெக்டயரில் பின்வரும் அளவான விளைவைப் பெறலாம்.

கொடி போஞ்சி 10 - 15 மெ. தொன்,

பசளை இடல்

செடி போஞ்சி

யூறியா

கி.கி / ஹெ

முச்சுப்பர் பொசுபேற்று

கி.கி / ஹெ

மியுறியேற்றுப்

பொட்டாசு கி.கி / ஹெ

அடிக்கட்டுப் பசளை

85

165

65

விதை முளைத்து 3வது வாரம்

85

-

75

நீர்ப்பானம்

போதியளவான ஈரப்பதன் மண்ணில் காணப்படும் போது அதிக விளைச்சலைப் பெறலாம். பூக்களும், காய்களும் உருவாகும் போது அவசியம் மண்ணில் போதியளவு ஈரப்பதன் இருத்தல் வேண்டும்.

பீடைக்கட்டுப்பாடு

போஞ்சி ஈ, காய்துளைப்புழு, இலைச் சுரங்கமறுப்பி என்பன போஞ்சியைப் பாதிக்கும் பிரதான பூச்சிகளாகும். போஞ்சி ஈ, யைக் கட்டுப்படுத்த போஞ்சி விதை முளைத்த பின்னர் போமோதியோன் அல்லது மெற்றாசிஸ்ரொக்ஸ் இல் (01 அவுச்சை 03 கலன்) நீரிற் கலந்து விசிறல் வேண்டும். 10 - 12 நாட்களில் பின்னர் நாசினியை மீண்டும் விசிற சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

காய் துளைப்புழுவிற்கு பூக்கும் போது உகந்த பூச்சிநாசினி யொன்றை விசிறல் வேண்டும். வயற் சுகாதாரம், தடைகளை ஏற்படுத்தல் இயற்கை எதிர்ப்புகளை இலைச்சுரங்க மறுப்பியைக் கட்டுப்படுத்த உகந்த பூச்சிநாசினி யொன்றை ஆரம்பத்திலேயே விசிறல் வேண்டும்.

நோய்க்கட்டுப்பாடு

அந்திரக்நோசு, துருநோய் போஞ்சி சித்தர வடிவ வைரசு நோய் என்பன போஞ்சிப் பயிரிப் பிரதான நோய்களாகும். அந்திரக்நோசைக் கட்டுப்படுத்த சிபாரிசு செய்யப்பட்ட பங்கசு நாசினியை விசிறல் அல்லது விதைப்பரிகரணம் செய்ய வேண்டும், துருநோயைக் கட்டுப்படுத்த சிபாரிசு செய்யப்பட்ட நாசினியை விசிறல் அல்லது எதிர்ப்புத் தன்மையுள்ள வர்க்கத்தை நடல்.

களைக் கட்டிப்பாடு

மேற்கட்டுப் பசளையை இட முன் களையைக் கட்டுப்படுத்தவும்.

அறுவடை செய்தல்

செடி போஞ்சியிலிருந்து 45 நாட்களிலும், கொடி போஞ்சியிலிருந்து 60 நாடகளிலும் அறுவடையைப் பெறலாம். எப்போதும் காய்கள் முதிர்ச்சியடைய முன்னரே அறுவடை செய்ய வேண்டும்.

விளைச்சல்

சிறப்பாக பராமரித்தால் ஒரு ஹெக்டயரில் பின்வரும் அளவான விளைவைப் பெறலாம்.

செடி போஞ்சி 5 - 10 மெ.தொன்

அறுவடை செய்த பின்

எப்போதும் காய்களுக்குச் சேதம் ஏற்படாதவாறு கொண்டு செல்லவும். இவற்றைக் கொண்டு செல்லும் போது போதியளவான காற்றோட்டம் இருப்பது அவசியமாகும்.

விதை உற்பத்தி

உள்ளுரிலேயே விதைகளை உற்பத்தி செய்யலாம். நோய் இல்லாத தாவரங்கலிருந்து மாத்திரம் விதைகளைப் பெற வேண்டும். செடி போஞ்சியில் ஹெக்டயருக்கு 01 மெ. தொன் விதையும் கொடி போஞ்சியில் 1 1/2 மெ.தொன் விதையையும் பெறலாம். விதைகளை சேமிக்க முன் நன்கு உலர்த்தவும்.

பீடை போஞ்சி

வெண் ஈ

தாவரப் சாற்றை உறிஞ்சிக் குடிக்கும் இதனால் வெளியிடப்படும் பானி பங்கசின் பாதிப்பை அதிகரிக்கும். இதனால் இலை மஞ்சளாகி சுருளும் வைரச் நோய்க காவியாகவும் தொழிற்படும்

குறித்த காலத்தில் பயிரிடல் பயிர் சுழற்சி பாதிக்கப்பட்ட பயிர்ப் பகுதிகளை அழித்தல் விதைப் பரிகாரம் மஞ்சள் நிற பொறிகள் என்பன இதனை கட்டுப்பத்த உதவும்.

வெட்டுப் புழு

இவற்றை கட்டுபட்டத்த ஆழமான உழவேண்டும். வயற் சுகாதாரம் இயற்கை எதிரிகளான பறவைகள் என்பவை இதனைக் கட்டுப்படுத்த உதவும்.

நோய்கள்

பிதியம் அழுகல்

தண்டின் அடிப்பகுதியும் வேரும் கபில நிறமாகும். தொடர்ச்சிய ஒரே நிலத்தில் போஞ்சி பயிரிடுவதைத் தவிர்ப்பதன் முலமாகவும் நல்ல நீர்வடிப்பை ஏற்படுத்தியும் அதிகளவு N பசளையிடலை தவிர்ப்பதன் மூலமாகவும் இதனைக் கட்டுப்பத்தலாம்.

வேர் அழுகல்

இலைகள் மஞ்சளாகும் தண்டின் அடி அழுகல். தாவர கழிவுகளை அகற்றவும். சிபாரிசு செய்யப்பட்ட பங்கசு நாசினியை விசிறவும்.

அந்திரக் நோஸ்

காய் இலைகளில் குழிவான புள்ளிகள் காணப்படும். ஆரம்பத்தில் கபில நிறமான இருந்து பின்னர் கறுப்பாக மாறும் அரும் புன் நிறம் மாறும். Daponil பங்கசு நாசினியை விசிறலாம்.

துருநோய்

இலை காய்களில் இளம் சிவப்பு கபில நிறமான சிறிய புள்ளிகள் உருவாகும். பங்கசு நாசினியைப் பயன்படுத்தவும்

சித்தர வடிவ வைரசு

இலையில் மஞ்சள் பச்சை நிறப் அடையாளங்கள் காணப்படும். பயிர் குறளும் எதிர்ப்புத் தன்மையுடைய பயிர்களை பயிரிடுவதன் மூலமும், நோயற்ற விதையைப் பயன்படுத்தவும் பாதிக்கப்பட்ட பயிர் மீதிகளை அழிப்பதன் மூலமும் களைகளை அழித்தும் இதனைக் கட்டுப்பத்தவும்.