விவசாய தொழில்முயற்சியாளர் ஒருவராக மாறுவதற்கு ஆர்முள்ளவர்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் செயற்றிட்டம்

விவசாய வியாபார அபிவிருத்தி மற்றும் தகவல்கள் சேவையின் மூலம் ஒவ்வொரு வருடமும் விவசாய தொழில்முயற்சி அபிவிருத்தி பாடநெறிகள் நடாத்தப்படுகின்றது. வெற்றிகரமான தொழில்முயற்சியாளர் ஒருவராக மாறுவதற்கு அவசியப்படும் விரிவுரைகள் மற்றும் செய்முறைகள் தொடர்பான அறிவினை பெற்றுக் கொடுக்கும் 20 தொகுதிக்கூறுகள் (Module) காணப்படுகின்றன. இத்தொகுதிக்கூறுகளில் பயிர்ச்செய்கை முறைகள், உற்பத்திப் பொருட்களுக்கு பெறுமதி சேர்த்தல், சாத்தியப்பாடு காணப்படும் விவசாய வியாபாரங்களை இனங்கண்டு கொள்ளல் மற்றும் உத்தேச செயற்றிட்டங்களை எழுதுதல் போன்ற பல்வேறுபட்ட துறைகள் உள்ளடங்குகின்றது.

பண்ணை அபிவிருத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனை சேவை

விவசாய வியாபார அபிவிருத்தி மற்றும் தகவல்கள் சேவையானது குறைபாடுகளுடன் காணப்படும் வர்த்தக ரீதியான பண்ணைகளை அபிவிருத்தி செய்வதற்கான உதவிகளை வழங்குகின்றது. குறித்த பண்ணையின் உரிமையாளருக்கு பண்ணையின் தற்போதைய நிலைமை தொடர்பான விபரங்கள் மற்றும் தனது விருப்பு கடிதம் ஆகியவற்றை முறையான முறையில் சமர்ப்பிக்க முடியும். அதன்பின் இப்பிரிவின் உத்தியோகத்தர்கள் குறித்த பண்ணைக்கு சென்று உரிமையாளரின் விருப்புக்கமைவாக எதிர்பார்க்கப்படும் உற்பத்தியினை மேற்கொள்வதற்கு அவசியப்படும் தொழில்நுட்ப சிபாரிசுகளை பெற்றுக் கொடுப்பதற்காக விசேடத்துனர்களின் குழு ஒன்றினை தெரிவு செய்து வழங்கும்.